லோகேஷ் கனகராஜ், அல்லு அர்ஜூன் படம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்த ரத்னகுமார்!
ADDED : 189 days ago
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது இயக்குனர் அட்லி இயக்கத்தில் 'ராக்கா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து அல்லு அர்ஜுன் அவரது 23வது படத்தில் நடிக்கவுள்ளார். இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
தற்போது இந்த படத்தை குறித்து எழுத்தாளர் மற்றும் இயக்குனர் ரத்னகுமார் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதன்படி, அல்லு அர்ஜுன் படத்தின் கதையை முதலில் தமிழில் தான் எழுதினார் லோகேஷ். அதன் பின்னர் தெலுங்கு மொழி தெரிந்த இரண்டு எழுத்தாளர்களைக் கொண்டு மொழிபெயர்த்து எழுதி வருகின்றனர். எனத் தெரிவித்துள்ளார்.