'கர' முதல் நாள் வசூல் எவ்வளவு ?
விக்னேஷ் ராஜா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையில், தனுஷ், மமிதா பைஜு மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான படம் 'கர'. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியானது.
நேற்றைய முதல் நாள் வசூலாக தமிழகத்தில் 5 கோடி, தெலுங்கில் ஒரு கோடியே 50 லட்சம், கர்நாடகாவில் 60 லட்சம், வட இந்தியாவில் 25 லட்சம் என இப்படம் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனுஷ் நடித்து கடந்த சில வருடங்களில் வெளிவந்த படங்களில் குறைவான முதல் நாள் வசூலை இந்தப் படம் பெற்றுள்ளதாகச் சொல்கிறார்கள். தனுஷ் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'இட்லி கடை' படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.
தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் 'கர' வசூல் குறிப்பிடும்படி இருக்கும் என்கிறார்கள். படத்திற்கு நெகட்டிவ்வான விமர்சனங்கள் அதிகம் இல்லை என்றாலும் கமர்ஷியலான படமாக இல்லை என்ற விமர்சனம் இருக்கிறது.