விஜய்க்கு மாஸான பாடல் கம்போஸ் செய்ய ஆசைப்பட்டேன்!- பீல் பண்ணும் சாய் அபயங்கர்!
தமிழ், மலையாளத்தில் வெளியான 'பல்டி' என்ற படத்தில் இசையமைத்து சினிமாவில் அறிமுகமானவர் சாய் அபயங்கர். அதன் பிறகு பிரதீப் ரங்கநாதன் நடித்து திரைக்கு வந்த 'டியூட்' படத்திற்கு இசையமைத்தார். அந்த படமும், பாடல்களும் ஹிட் அடித்தன. தற்போது சூர்யாவின் கருப்பு, அல்லு அர்ஜுனின் 'ராக்கா' மற்றும் 'பென்ஸ், மார்ஷல், தனுஷ் 55' என பல படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில் சாய் அபயங்கர் அளித்த ஒரு பேட்டியில், விஜய் படத்திற்கு இசையமைக்க முடியாமல் போனது குறித்து தனது வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார். அதில் அவர் கூறுகையில், ''நான் விஜயின் ரசிகன் என்பதை விட அவரது வெறியன் என்றுதான் சொல்ல வேண்டும். அதனால் அவர் படங்களுக்கு இசையமைக்க வேண்டும். அவருக்காக மாஸான ஹிட் பாடல்களை கொடுக்க வேண்டும் என்று ரொம்பவே ஆசைப்பட்டேன். குறிப்பாக அவர் நடித்த சச்சின் மாதிரியான படங்களுக்கு இசையமைக்க ரொம்பவே விரும்பினேன். ஆனால் அவர் சினிமாவில் இருந்து விலகி விட்டதால் என்னுடைய ஆசை நிறைவேறாமல் போய்விட்டது. இது எனக்கு மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்துள்ளது'' என்று தெரிவித்திருக்கிறார் சாய் அபயங்கர்.