கீர்த்தி சுரேஷ்- மிஷ்கினின் 'சத்தியவான் சாவித்திரி' செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது
ADDED : 130 days ago
பிரவீன் எஸ்.விஜய் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், இயக்குனர் மிஷ்கின் ஆகிய இருவரும் எதிரும் புதிருமான வழக்கறிஞர்களாக மோதிக்கொள்ளும் படம் 'சத்தியவான் சாவித்திரி'. அவர்களுடன் பாலாஜி சக்திவேல், ஆர்.சுந்தர்ராஜன், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் இந்த சத்தியவான் சாவித்திரி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு இன்று செகண்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்கள்.