மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
829 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
829 days ago
ஹிப் ஆப் தமிழா ஆதி நடித்துள்ள புதிய படம் 'வீரன்'. அவருடன் ஆதிரா ராஜ், வினய் ராய், காளி வெங்கட், முனீஷ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். படம் வருகிற 2ம் தேதி வெளிவருகிறது. இதை தொடர்ந்து ஆதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
நான் நடித்திருக்கும் படங்களிலேயே இந்த படத்தில்தான் ஆக்ஷன் அதிகமாக இருக்கும். குதிரையிலே ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் இருக்கும். அதற்காக முறையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்து அதை செயல்படுத்தினோம். கிட்டத்தட்ட இந்த பயணத்தில் 6 மாதங்கள் இயக்குனரும் உடன் இருந்தார். வேலையைத் தாண்டி சிலர் மட்டும்தான் நம் வாழ்க்கையிலும் நண்பர்களாக வருவார்கள். அதில் எனக்கு இயக்குனர் சரவனும் ஒருவர். இதற்கு அடுத்தும் தொடர்ந்து வேலை செய்வோம் என்று காத்திருக்கிறேன். இந்த படம் மூலம் அவர் இன்னும் பெரிய உயரங்களைத் தொட வேண்டும்.
இந்தப் படத்தின் சூப்பர் வில்லன் வினய். அவர் இந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டதாலே படம் இன்னும் பெரிதானது. ஆதிரா கேரளாவில் இருந்து வந்திருக்கிறார். படம் முடிவதற்குள்ளாகவே நிறைய தமிழ் கற்றுக் கொண்டார். அடுத்தடுத்த படங்களில் இன்னும் தமிழ் கற்றுக் கொண்டு சிறப்பாக நடிப்பார். அவருடைய முயற்சிக்கு இன்னும் பெரிய இடத்தை அடைவார்.
இந்த படத்தில் நான் நடித்ததை விட கற்றுக்கொண்ட விஷயங்கள் நிறைய இருக்கிறது. மண் சார்ந்த ஒரு சூப்பர் ஹீரோ என்பதால் அதற்கேற்ற உடைகளை அணிந்து நடிக்க வேண்டியது இருந்தது. என்னதான் சூப்பர் மேன், அயர்ன் மேன் என படங்கள் வந்தாலும் நம் மண் சார்ந்த சூப்பர் மேன்கள் என்பது எப்போதும் ஸ்பெஷல் தான். அந்த வகையில் எனக்கு 90'ஸ் கிட்ஸ் ஆக சக்திமான் எப்போதும் நாஸ்டலஜியா.
இப்போது, ஸ்கூல் திறப்பு தள்ளி போயிருக்கிறது. அதற்கு முன்பு குழந்தைகளோடு குடும்பமாக கண்டிப்பாக இந்த 'வீரன்' படத்தை கொண்டு வந்து காண்பிக்கலாம். அவர்களுக்கு இன்னும் ஒரு 10 வருடம் கழித்து 'வீரன்' ஒரு நினைவில் நிற்கக்கூடிய சூப்பர் ஹீரோவாக இருக்கும். படத்தில் முகம் சுழிக்க வைக்கும் காட்சி ஒன்று கூட கிடையாது. இசையிலும் பல புதிய விஷயங்கள் பரிசோதித்து இருக்கிறோம்.
ஒவ்வொரு படத்திலும் நான் நடிக்கும் கேரக்டருக்கு நிறைய மெனக்கெடுகிறேன். பயிற்சி எடுக்கிறேன். அதனால்தான் எனது படங்கள் இடைவெளிவிட்டு வருகிறது. அதோடு இரண்டு ஆண்டுகள் கொரோனா காலம், மேலும் இரண்டு ஆண்டுகள் முனைவர் பட்டத்திற்காக படிக்கச் சென்று விட்டேன். இனி தொடர்ந்து நடிப்பேன். இசை பணியும் தொடரும். என்றார்.
829 days ago
829 days ago