உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜாக்கிங் சென்ற தனுஷ்.. வைரலாகும் வீடியோ!

ஜாக்கிங் சென்ற தனுஷ்.. வைரலாகும் வீடியோ!

நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் மும்பை சென்ற தனுஷ் அங்கு தனது அடுத்த ஹிந்தி படத்திற்கான டெஸ்ட் ஷூட் முடிவடைந்த பிறகு நேற்று தென்காசியில் நடைபெற்ற கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். தென்காசி அருகாமையில் உள்ள கிராமத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் தனுஷ் அந்த கிராமத்தில் ஜாக்கிங் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியானது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !