லியோ படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!
ADDED : 1191 days ago
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் லியோ. த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் டத், மிஷ்கின், மேத்தியூ தாமஸ்,கெளதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை ‛7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பின் படி, இந்த படத்தின் வெளிநாட்டு தியேட்டர் உரிமையை வாரிசு, வாத்தி போன்ற படங்களை விநியோகம் செய்த பிரபல விநியோக நிறுவனம் பராஸ் பிலிம்ஸ் வெளியிடுகின்றனர் என்று வீடியோ உடன் அறிவித்துள்ளனர். ஆர்.ஆர்.ஆர், சலார் படத்திற்கு அடுத்து அதிக விலைக்கு போன தென்னிந்திய திரைப்படம் லியோ என்பது குறிப்பிடத்தக்கது.