பிடித்தமான பாடலுக்கு நடனமாடுவது ரொம்ப பிடிக்கும் - தமன்னா
ADDED : 896 days ago
தமிழில் ரஜினியின் ஜெயிலர் மற்றும் அரண்மனை 4, காத்து கருப்பு, ஏன் என்றால் காதல் என்பேன் போன்ற படங்களில் நடித்து வருகிறார் தமன்னா. இதே போல் தெலுங்கிலும் போலா சங்கர், தட் இஸ் மகாலட்சுமி ஆகிய படங்களில் நடிக்கும் தமன்னா, ஹிந்தியில் லஸ்ட் ஸ்டோரி 2 என்ற வெப்சீரிஸில் நடித்துள்ளார். இதன் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில், தன்னுடைய இணைய பக்கத்தில் சிறுவயதில் ஒரு மேடையில் தான் நடனமாடும் போட்டோவையும், கடற்கரையில் இப்போது நடனமாடும் வீடியோவையும் ஒன்றாக இணைத்து வீடியோவாக வெளியிட்டுள்ளார் தமன்னா. அதோடு, சிறிய வயதில் இருந்தே பிடித்தமான பாடல்களுக்கு நடனமாடி வருகிறேன். இதை விட பெரிய மகிழ்ச்சி எனக்கு எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள தமன்னா, என்ஜாய் பண்ணுங்க என்று ஸ்மைலி எமோஜிகளையும் பதிவிட்டுள்ளார்.