ஜனாதிபதியை சந்தித்த சமந்தா
ADDED : 861 days ago
உலக புகழ்பெற்ற 'சிட்டாடல்' வெப் தொடரின் இந்திய வெர்சனில் சமந்தாவும், வருண் தவானும் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு செர்பிய நாட்டில் நடந்து வருகிறது. தற்போது செர்பிய நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை சமந்தா, வருண் தவான் உள்ளிட்ட படக்குழுவினர் சந்தித்தனர். ஜனாதிபதியை சந்தித்த படங்களை வெளியிட்டுள்ள வருண் தவான், “செர்பியாவில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்கும் அதிர்ஷ்டம் சிட்டாடல் குழுவிற்கு கிடைத்தது. இதை ஒரு கவுரவமாக உணர்கிறோம்” என்று வருண் தவான் பதிவிட்டுள்ளார். மேலும் சமந்தாவும் இந்த படங்களை வெளியிட்டு 'மேடம் பிரசிடெண்ட்' என்று எழுதியுள்ளார். இந்த படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.