தங்கலான் படம் குறித்து பார்வதி நெகிழ்ச்சி
ADDED : 882 days ago
மலையாள நடிகை பார்வதி தமிழில் பூ, மரியான் போன்ற சில படங்களில் மட்டும் நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பார்வதி. சமீபத்தில் அவர் சம்பந்தப்பட்ட படக்காட்சிகள் முடிவடைந்தன. இப்போது அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கலான் படம் குறித்து பகிர்ந்துள்ளார். தங்கலான் படத்தில் நடித்தது பணம், புகழை தாண்டி பணியை செய்த திருப்தியை கொடுத்துள்ளது. எனக்கு திருப்தியான படம் உங்களைப் போலவே நானும் இந்த படத்தை திரையில் காண ஆர்வமாக உள்ளேன்'' என்று பதிவிட்டுள்ளார்.