மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
807 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
807 days ago
சின்னத்திரை நடிகர்கள் தினேஷ் மற்றும் ரச்சிதா மஹாலெட்சுமி ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியே பிரிந்துவிட்டனர். இந்நிலையில் தற்போது இருவருக்குமிடையே பிரச்னை முற்றிப்போய் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றுவிட்டது. தினேஷ் தனக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பி மிரட்டுவதாக ரச்சிதா அண்மையில் போலீஸ் புகார் கொடுத்திருந்தார். இதனையடுத்து இருவருமிடம் விசாரனை நடத்திய காவல்துறையினர் விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடுமாறு அட்வைஸ் செய்து அனுப்பி வைத்துள்ளனர். தற்போது ரச்சிதாவின் புகார் குறித்து விளக்கமளித்துள்ள தினேஷ், தனது செல்போனில் ரச்சிதாவுடன் பேசிய சேட் பாக்ஸை காட்டி தான் ஆபாசமாகவோ, திட்டியோ ரச்சிதாவிற்கு மெசேஜ் அனுப்பவில்லை என்று கூறியுள்ளார். மேலும், காவல் நிலையத்தில் ரச்சிதாவின் நடத்தையை வைத்து பார்க்கும் போது இனி சேர்ந்து வாழ வாய்ப்பை இல்லை என்பதை புரிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
807 days ago
807 days ago