மகேஷ் பாபு படத்தில் இணைந்த மீனாட்சி சவுத்ரி
ADDED : 882 days ago
த்ரி விக்ரம் இயக்கத்தில் நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் குண்டூர் காரம். ஹாரிகா - ஹசைன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். 2024 பொங்கலுக்கு இப்படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் கதாநாயகிகளாக பூஜா ஹெக்டே, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிப்பதாக அறிவித்தனர். இப்போது கால்ஷீட் பிரச்சினையால் பூஜா ஹெக்டே இந்த படத்தில் இருந்து வெளியேறியுள்ளார். அதனால் அவர் கதாபாத்திரத்தில் தற்போது ஸ்ரீலீலா நடிக்கிறார் என்கிறார்கள். ஸ்ரீலீலா நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் சம்யுக்தா நடிக்கிறார். இவர்களுடன் இப்போது குண்டூர் காரம் படத்தில் நடிக்க கில்லாடி படத்தில் நடித்த நடிகை மீனாட்சி சவுத்ரி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.