உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெற்றி பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் சிம்பு

வெற்றி பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் சிம்பு

பத்து தல படத்திற்கு பின் நடிகர் சிலம்பரசன் தற்போது இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். நாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். தற்போது படப்பிடிப்பிற்கு முந்தைய பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. இந்த நிலையில் சிம்பு தனது 49வது படத்திற்கு கதை கேட்கும் பணிகளில் இறங்கியுள்ளார். சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி திரைப்படமான போர் தொழில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜை அழைத்து கதை கேட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !