உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகை பலாத்கார வழக்கு : திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீடு

நடிகை பலாத்கார வழக்கு : திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீடு

கடந்த 2017ம் ஆண்டு பிரபல மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், நடிகையின் காரை ஓட்டிய மார்ட்டின், முன்னாள் டிரைவர் பல்சர் சுனில்குமார் என்பவர் உள்பட 6 பேரை கைது செய்தனர் இவர்களிடம் நடத்திய விசாரணையில் பலாத்காரத்திற்கு சதித்திட்டம் தீட்டியதாக பிரபல நடிகர் திலீப் திலீப் அவரது நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் திலீப் ஜாமீனில் விடுதலையானார்.

இந்த வழக்கின் தீர்ப்பில் பல்சர் சுனில்குமார், மார்ட்டின் உள்பட 6 பேருக்கு 20 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சதித்திட்டம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி நடிகர் திலீப் உள்பட 4 பேர் விடுவிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட நடிகை தனக்கு சரியான நீதி கிடைக்கவில்லை என்றும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் கேரள முதல்வரை சந்தித்து முறையிட்டார்.

இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் “சதித்திட்டம் தீட்டியதற்கு நடிகர் திலீப்புக்கு எதிராக முக்கியமான ஆவணங்கள் உள்ளன. இது தொடர்பான சாட்சியங்களை நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை. விசாரணை நீதிமன்ற நீதிபதி ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டுள்ளார். குற்றவாளிகள் 6 பேருக்கும் மிகவும் குறைந்த தண்டனையே வழங்கப்பட்டுள்ளது. எனவே மறுவிசாரணை செய்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்” என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !