உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏப்ரல் 24ல் மெக்சிகோவில் திரையிடப்படும் 'வாரணாசி' பட காட்சிகள்!

ஏப்ரல் 24ல் மெக்சிகோவில் திரையிடப்படும் 'வாரணாசி' பட காட்சிகள்!


மகேஷ் பாபு நடிப்பில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'வாரணாசி'. இந்த படம் 2027ம் ஆண்டு ஏப்ரல் ஏழாம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, மகேஷ் பாபுவுடன் பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் உலக அளவிலான ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகிற ஏப்ரல் 24ம் தேதியான நாளை மெக்சிகோவில் வாரணாசி படத்தின் சிசிஎஸ்பி திரையிடப்படுவதாக இப்படத்தின் தயாரிப்பாளரான எஸ்.எஸ்.கார்த்திகேயா அறிவித்திருக்கிறார். அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நிலையில், ராஜமவுலி காணொளி மூலம் பார்வையாளர்களிடம் உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் வாரணாசி படத்தின் ஆரம்பகட்ட காட்சிகள் மற்றும் படப்பிடிப்பின் பின்னணி காட்சிகள் என இதுவரை பார்த்திராத பிரத்யேக காட்சிகளை திரையிடுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !