மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
822 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
822 days ago
சின்னத்திரை நட்சத்திரங்களான சேத்தனும், தேவதர்ஷினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் சின்னத்திரை, பெரியதிரை இரண்டிலும் நடித்து வருகிறார்கள். இவர்களது மகள் நியதி. விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96 ' படத்தில் தேவதர்ஷினி, த்ரிஷாவின் தோழியாக நடித்தார். அவர்களது இளமைக்கால பிளாஷ்பேக் கதையில் சிறுவயது தேவதர்ஷினியாக நடித்தவர் நியதி.
நியதி படித்துக் கொண்டிருந்ததால் அந்த ஒரு படத்தோடு விலகி தனது படிப்பை தொடர்ந்தார். தற்போது படிப்பை முடித்து விட்டதால் நடிக்க தயாராகி விட்டார்.தற்போது மலையாளத்தில் 'ராணி' என்கிற படத்தில் நடித்து வருகிறார் நியதி. அடுத்ததாக அவர் தமிழ் படத்தில் நடிக்க முயற்சித்து வருகிறார். இதற்காக தனி போட்டோஷூட் நடத்தி வெளியிட்டுள்ளார். தொடர்ந்து கதையும் கேட்டு வருகிறார். விரைவில் நியதி நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளிவர இருக்கிறது.
822 days ago
822 days ago