உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஷால் படத்திற்கு இசையமைக்கும் தேவிஸ்ரீ பிரசாத்

விஷால் படத்திற்கு இசையமைக்கும் தேவிஸ்ரீ பிரசாத்

நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து மீண்டும் ஹரி இயக்கத்தில் விஷால் தனது 34வது படத்தில் நடிக்கவுள்ளார். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இரு நிறுவனங்களும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தை அறிவித்தனர். இந்த நிலையில் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே ஹரி இயக்கத்தில் சிங்கம் 1, 2 , வேங்கை ஆகிய படங்களுக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அதேப்போன்று விஷாலின் தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களை ஹரி இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் உள்ளன. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற இடங்களில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !