நாக சைதன்யா 25வது படத்தை இயக்கும் மஜிலி பட இயக்குனர்!
ADDED : 1184 days ago
நடிகர் நாக சைதன்யா நடித்து கடைசியாக வெளிவந்த சில படங்கள் தோல்வி அடைந்ததை தொடர்ந்து கதை தேர்வுகளில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தனது 25வது படத்தின் இயக்குனரை முடிவு செய்துள்ளார் நாக சைதன்யா.
நாக சைதன்யாவின் 25வது படத்தை இயக்குனர் சிவா நிர்வானா இயக்குகிறார் என கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த கூட்டணியில் வெளிவந்த மஜிலி திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது. பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் துவங்கி அடுத்த வருடத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.