சாதனை படைக்கும் சலார் படம்!
கே.ஜி.எப் 1,2 பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் சலார். பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரவி பசூர் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி யூடியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வருகின்ற செப்டம்பர் 28ம் தேதி அன்று வெளியாகிறது.
ஏற்கனவே இந்த படத்தின் பிஸ்னஸ் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தை அமெரிக்காவில் மட்டும் 1979 திரைகளில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இதுதான் இந்திய சினிமாவிலேயே அதிக திரைகளில் வெளியாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வெளிநாடுகளில் இந்த படத்தை 5000 திரைகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.