மேலும் செய்திகள்
பைசன் படத்தின் 2வது பாடல் வெளியானது
784 days ago
‛யாத்திசை' இயக்குனருடன் இணையும் ரவி மோகன்
784 days ago
அக். 10ல் ஒளிபரப்பாகும் ‛வேடுவன்' வெப் தொடர்
784 days ago
கமல்ஹாசன் இன்னொரு ஹீரோவுக்கு வில்லனாக நடிக்கும் படம் 'கல்கி 2898ஏடி'. 'மகாநடி' படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி நடிக்கிறார்க்கள். வைஜெயந்தி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ, அமெரிக்காவில் நடந்த காமிக் கான் விழாவில் வெளியிடப்பட்டது. இதில் கமல்ஹாசன், பிரபாஸ், நாக் அஸ்வின், ராணா கலந்துகொண்டனர். ஆனால் அமிதாப்பச்சன் கலந்து கொள்ளவில்லை. அவரது வாழ்த்து வீடியோ திரையிடப்பட்டது.
இந்த விழாவில் கலந்து கொள்ளாதது பற்றி அமிதாப்பச்சன் தற்போது விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது “விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று இயக்குனர் நாக் அஸ்வின் என்னிடம் கேட்டுக்கொண்டார். ஆனால், அதிக வேலை பளு மற்றும் மருத்துவக் கட்டுப்பாடு காரணத்தால் என்னால் அங்கு செல்ல முடியவில்லை. படத்தின் முதல் தோற்றம் சிறப்பாக இருந்தது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்” என்றார்.
784 days ago
784 days ago
784 days ago