யோகி பாபுவின் லக்கி மேன் டீசர் வெளியீடு
ADDED : 800 days ago
பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‛லக்கி மேன்'. இப்படத்தில் அவருடன் வீரா, ரேச்சல், ஆர்.எஸ்.சிவாஜி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். திங்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் அதிர்ஷ்டத்தை தேடி அலையும் வேடத்தில் யோகி பாபு நடித்திருக்கிறார். இந்த நிலையில் லக்கி மேன் படத்தின் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இந்த உலகம் அளவோடு இருக்கும் வரை ரசிக்கும். அறிவோடு இருக்கிறவனை மதிக்கும். பணத்தோடு இருப்பவனை பார்த்து பொறாமைப்படும். அதிகாரத்தில் இருக்கிறவரை பார்த்து பயப்படும். ஆனால் என்றைக்குமே உழைக்கிறவனை மட்டும் தான் நம்பும் என்று நான்கு கேரக்டர்களை அறிமுகம் செய்தபடி இந்த டீசர் வெளியாகி உள்ளது. ஆனால் யோகி பாபுவின் கதாபாத்திரம் வழக்கம்போல் காமெடியில் உருவாகி இருக்கிறது.