நமீதா நடத்திய போட்டோ சூட் : மீண்டும் ரீ-என்ட்ரியா?
ADDED : 799 days ago
தமிழ் சினிமாவில் விஜயகாந்த், சத்யராஜ் , விஜய், அஜித், என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து கிளாமர் ஹீரோயினாக ஒரு ரவுண்ட் வந்தவர் நமீதா. கடந்த 2017ல் வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்ட நமீதா, இரட்டை குழந்தைகளுக்கு அம்மாவானார். தமிழக பாஜகவிலும் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஓரளவு வெயிட் குறைத்துள்ள நமீதா, போட்டோ சூட் நடத்திய ஒரு வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார். இதனால் நமீதா மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுப்பதற்கு தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.