'லால் சலாம்' படப்பிடிப்பை நிறைவு செய்த விஷ்ணு விஷால்
ADDED : 839 days ago
ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க, விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் பலர் நடிக்கும் படம் 'லால் சலாம்'. ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் இப்படத்தில் தன்னுடைய படப்பிடிப்பை முடித்துள்ளார் விஷ்ணு விஷால்.
“லால் சலாம்' படப்பிடிப்பு எனக்கு முடிந்துவிட்டது. என்ன ஒரு பயணம் இது… எமோஷனலாகவும், உற்சாகமாகவும் இருந்தது. நிறைய கற்றுக் கொண்டேன். இந்த மறக்க முடியாத பயணத்திற்கு எனது இயக்குனர் ஐஸ்வர்யாவுக்கும், லைக்காவுக்கும் நன்றி,” எனக் குறிப்பிட்டு மனைவி ஜுவாலா கட்டாவுடன் கேக் வெட்டி கொண்டாடி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.
கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் ரஜினிகாந்தின் கதாபாத்திர போஸ்டர் மட்டும் வெளியாகியது. படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதால் இனி அடுத்தடுத்து அப்டேட்டுகளை வெளியாக வாய்ப்புள்ளது.