மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
750 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
750 days ago
பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு
750 days ago
கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களின் தொடர் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் சலார். பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாகவும், நடிகர் பிரித்விராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக தயாராகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் முதல் பாகத்திற்காக விடுபட்ட சில காட்சிகளுக்கான படப்பிடிப்பை சமீபத்தில் நடத்தினார் இயக்குனர் பிரசாந்த் நீல்.
மங்களூரில் நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பு தளத்திற்கு அருகிலே தான் காந்தாரா இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி தனது அடுத்த படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனை அடுத்து சலார் படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் விசிட் அடித்த ரிஷப் ஷெட்டி, இயக்குனர் பிரசாந்த் நீலை சந்தித்து சில மணி நேரங்கள் சலார் பற்றியும் தனது அடுத்த படம் பற்றியும் பேசிக்கொண்டிருந்து விட்டு கிளம்பி சென்றார்.
750 days ago
750 days ago
750 days ago