ஷாரூக்கான் வீடு அருகே சுவர்களில் அலங்கரித்த ‛ஜவான்' ஓவியங்கள்
ADDED : 792 days ago
அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, பிரியாமணி, யோகி பாபு, அம்ரிதா ஐயர் உள்பட பலர் நடித்துள்ள ஜவான் படம் செப்டம்பர் ஏழாம் தேதி திரைக்கு வரவுள்ளது. தற்போது அப்படத்தின் புரொமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், மும்பையில் உள்ள ஷாரூக்கானின் வீட்டு அருகே உள்ள சுவர்களில் தற்போது ஜவான் படத்தின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஜவான் படத்தின் ஓவியங்கள் அலங்கரிப்பட்டுள்ளதை பார்ப்பதற்கு ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது.