ரொமான்டிக் நாயகனாக உருவெடுக்கும் விஜய் ஆண்டனி
ADDED : 864 days ago
பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி நடித்த விஜய் ஆண்டனி தற்போது அக்னி சிறகுகள், மழை பிடிக்காத மனிதன் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து சீரியஸ் மற்றும் ஆக்சன் கதைகளில் நடித்து வந்த விஜய் ஆண்டனி, முதல் முறையாக ஒரு படத்தில் ரொமான்டிக் நாயகனாக உருவெடுத்துள்ளார். விநாயகம் வைத்தியநாதன் என்பவர் இயக்கும் அந்த படத்திற்கு ரோமியோ என்று டைட்டில் வைக்கப்பட்டுள் ளது. இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக சூப்பர் டீலக்ஸ், கோப்ரா உள்ளிட்ட சில படங்களில் நடித்த மிருணாளினி ரவி நடிக்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.