பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்!
ஹிந்தியில் கடந்த டிசம்பரில் வெளியான ‛துரந்தர்' படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார் ரன்வீர் சிங். வருகிற மார்ச் 19ம் தேதி அப்படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி கேட்டு மிரட்டல் வந்ததாக பாலிவுட்டில் ஒரு பரபரப்பு செய்தி வெளியாகி உள்ளது. இந்த மிரட்டல் அமெரிக்கா மொபைல் எண்ணில் இருந்து ரன்வீர் சிங்கின் மேலாளருக்கு வாட்ஸ்அப் குரல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசில் புகார் அளித்ததை அடுத்து காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். அதோடு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள குண்டர் கும்பல் லாரன்ஸ் பிஷ்னாயின் கும்பலுடன் தொடர்புடைய நபர்களை சந்தேகிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அந்த மொபைல் எண்ணை அமெரிக்காவில் தற்போது பயன்படுத்தி வருவது யார் என்பதை கண்டுபிடித்து அதன் பின்னணியை ஆராய்ந்து வருகிறார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரன்வீர் சிங்கிற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.