இரண்டாவது முறையாக இணையும் தனுஷ் - அருண் மாதேஸ்வரன் கூட்டணி!
ADDED : 1010 days ago
ராக்கி, சாணி காகிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், இப்படம் வருகின்ற டிசம்பர் 15ம் தேதி அன்று வெளியாகிறது.
இந்த நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகுவதற்கு முன்பே அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் புதிய படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தை தனுஷின் வுன்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பினால் ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.