தனுஷ் 51வது படத்தில் இணைந்தார் நாகர்ஜூனா
ADDED : 903 days ago
நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இதை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் தனது 51வது படத்தில் நடிக்கவுள்ளார். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார் என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா இணைந்துள்ளதாக படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர். நாகார்ஜூனாவிற்கு இன்று(ஆக., 29) பிறந்தநாள். இதையொட்டி இந்த அறிவிப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அடுத்த வருட ஜனவரி மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த படம் உருவாகிறது.