68வது படத்தில் அப்பா - மகனாக நடிக்கும் விஜய்
ADDED : 894 days ago
லியோ படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தனது 68வது படத்தில் நடிக்க போகிறார் விஜய். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். பிரபுதேவா, மாதவன், ஜெய் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா, பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பதாக தகவல் வந்த நிலையில் இப்போது அப்பா - மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் அவர் நடிப்பதாகவும், அப்பாவுக்கு மகனுக்கும் இடையிலான மோதல் தான் கதைக்களம் என்றும் கூறப்படுகிறது. ஆக்ஷன் திரில்லர் கதையில் உருவாகும் இப்படத்தில் பீஸ்ட் படத்தில் நடித்தது போன்ற ரா ஏஜென்டாகவும் ஒரு வேடத்தில் நடிக்கிறாராம் விஜய்.