விபத்தில் சிக்கிய சீரியல் நடிகர் : முக்கிய தொடரில் மாற்றம்
ADDED : 775 days ago
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணே கலைமானே தொடரில் ஹீரோவாக டான்ஸ் மாஸ்டர் நந்தா நடித்து வருகிறார். ஆனால், அவருக்கு பதிலாக இனிவரும் எபிசோடுகளில் தமிழும் சரஸ்வதியும் தொடரில் நடித்து வரும் நவீன் வெற்றி ஹீரோவாக தொடர்வார் என செய்திகள் வெளியாகி வருகிறது. இதுபுரியாமல் குழம்பிய ரசிகர்கள் நந்தா மாஸ்டர் ஏன் விலகினார் என கேட்டு வந்தனர்.
இந்நிலையில், நந்தா மாஸ்டர் தனது இன்ஸ்டாகிராமில் தனக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அண்மையில் நடந்த ஒரு விபத்தில் அவருக்கு இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. நந்தா மாஸ்டருக்கு தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. எனவே, தான் நந்தாவுக்கு பதிலாக நவீன் வெற்றியை நடிக்க வைக்க தயாரிப்பு குழு முடிவு செய்துள்ளது.