சவுந்தர்யா தயாரிக்கும் ‛கேங்க்ஸ்' வெப்தொடர்
ADDED : 760 days ago
நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யா தனது தந்தையை வைத்து ‛கோச்சடையான்' என்ற அனிமேஷன் படத்தை இயக்கி, இயக்குனராக அறிமுகமானார். அதன்பின் தனுஷை வைத்து ‛வேலையில்லா பட்டதாரி 2' படத்தை இயக்கினார். இடையில் ‛பொன்னியின் செல்வன்' நாவலை வெப் தொடராக எடுக்க போவதாக சொன்னார். ஆனால் அந்த பணிகள் அப்படியே கிடக்கின்றன.
இப்போது ‛கேங்க்ஸ்' என்ற வெப்தொடரை அவர் தயாரிக்கிறார். இதில் நாயகனாக அசோக் செல்வன் நடிக்கிறார். நோவா ஆபிரஹாம் என்பவர் இயக்குகிறார். இதற்கான படப்பிடிப்பு பூஜை உடன் சென்னையில் துவங்கியது. ரஜினியிடம் சவுந்தர்யா உள்ளிட்ட இந்த தொடரின் குழுவினர் நேரில் சென்று வாழ்த்து பெற்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த தொடர் ஓடிடியில் வெளியாக உள்ளது.