'டெவில்' படத்தில் இருந்து சம்யுக்தா பர்ஸ்ட் லுக் வெளியீடு
ADDED : 754 days ago
நடிகை சம்யுக்தா மலையாள சினிமா மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் வாத்தி படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது தெலுங்கு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். நவீன் மேடாராம் இயக்கத்தில் 'டெவில் - பிரிடிஷ் சீக்ரெட் ஏஜென்ட்' எனும் படத்தில் பிம்பிஷாரா படத்திற்கு பிறகு மீண்டும் நந்தமுரி கல்யாண் ராம் உடன் இணைந்து சம்யுக்தா நடிக்கிறார். அபிஷேக் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார். இன்று சம்யுக்தா பிறந்த நாளை முன்னிட்டு நைசதா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக படக்குழுவினர்கள் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். இந்த படம் வருகின்ற நவம்பர் 24ம் தேதி அன்று வெளியாகிறது.