உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இறைவன் அடுத்த பாடல் அப்டேட்

இறைவன் அடுத்த பாடல் அப்டேட்

என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய படங்களை இயக்கிய அகமத் தற்போது இறைவன் என்கிற படத்தை இயக்கியுள்ளார். ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.இந்த படம் வருகின்ற செப்டம்பர் 28ம் தேதி அன்று வெளியாகிறது. ஏற்கனவே இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகளை அதிக படுத்தியது. சமீபத்தில் இதன் முதல் சிங்கிள் வெளியானதை தொடர்ந்து இப்போது இரண்டாம் சிங்கிள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'இது போல' என்கிற இந்த பாடலை வருகின்ற செப்டம்பர் 16ம் தேதி மாலை 5.05 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !