‛ஸ்கந்தா' படத்தின் மூன்றாவது பாடல் அறிவிப்பு
ADDED : 750 days ago
போயபட்டி சீனு இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி, ஸ்ரீலீலா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஸ்கந்தா'. ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 28ம் தேதி அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ஏற்கனவே இந்த படத்திலிருந்து வெளிவந்த இரண்டு பாடல்கள் வரவேற்பை பெற்றன. மேலும் டிரைலர் வெளியாகி ரசிகர்களை நல்ல ஆக்ஷன் விருந்துக்கு தயார் செய்து வைத்துள்ளது. தற்போது இந்த படத்தின் மூன்றாவது பாடலாக 'கல்ட் மாமா' என்ற பாடல் செப்., 18ம் தேதி வெளியாக உள்ளதாக புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். இந்த பாடலில் ராம் பொத்தினேனி உடன் இணைந்து ஊர்வசி ரவுட்டேலா நடனம் ஆடி உள்ளார்.