நெல்சன் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்?
ADDED : 753 days ago
அல்லு அர்ஜுன் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தாலும், புஷ்பா படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்திய சினிமாவில் முக்கிய நடிகராக மாறியுள்ளார். தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே தமிழ் பட இயக்குனர்கள் லிங்குசாமி, அட்லீ ஆகியோர் அல்லு அர்ஜுனிடம் கதை சொன்னார்கள். இவற்றில் லிங்குசாமி படத்திற்கு பூஜையெல்லாம் நடந்தது. பின்னர் அந்த படம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் நெல்சனிடம் தற்போது அல்லு அர்ஜுன் புதிய படத்திற்கான கதை ஒன்றை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை இந்த கூட்டணியில் படம் அமைந்தால் கண்டிப்பாக தெலுங்கு சினிமாவிற்கு வித்தியாசமான படமாக இருக்கும் என்கிறார்கள்.