மீண்டும் இணையும் பகத் பாசில், வடிவேலு!
ADDED : 737 days ago
மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் 'மாமன்னன்'. இதில் உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், வடிவேலு ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் வெளிவந்த பிறகு பகத் பாசில், வடிவேலு இருவரின் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது. இந்த நிலையில் மீண்டும் பகத் பாசில், வடிவேலு இருவரும் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை ஒரு புதுமுக இயக்குனர் இயக்குகிறார் என்கிறார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகும் இதனை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இதன் படப்பிடிப்பு அடுத்த வருட ஜனவரி மாதத்தில் துவங்கும் என கூறப்படுகிறது.