பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு!
ADDED : 968 days ago
அனில் ரவிபுடி இயக்கத்தில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் படம் 'பகவந்த் கேசரி'. காஜல் அகர்வால், அர்ஜுன் ராம்பால், ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷைன் ஸ்கிரீன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இத்திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ம் தேதி அன்று வெளியாகிறது.
சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. ஏற்கனவே இதிலிருந்து வெளிவந்த முதல் பாடலை தொடர்ந்து தற்போது ‛உய்யாலோ உய்யாலா' எனும் இரண்டாம் பாடல் வருகின்ற அக்டோபர் 4ம் தேதி அன்று வெளியாகும் என படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.