சுற்றுலா சென்ற இடத்தில் போட்டோசூட் நடத்திய மாளவிகா மோகனன்!
ADDED : 773 days ago
பேட்ட, மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்த மாளவிகா மோகனன் தற்போது விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் படத்தில் நடித்திருக்கிறார். இது தவிர தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் அவர் நடித்து வருகிறார். மேலும், கிளாமர் போட்டோ சூட் நடத்தி அவ்வப்போது சோசியல் மீடியாவில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் மாளவிகா மோகனன், தற்போது லண்டனுக்கு சுற்றுலா சென்ற இடத்திலும் கவர்ச்சிகரமான உடையில் விதவிதமான போஸ்களில் போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.