உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் - பிரசாந்த் பங்குபெறும் பிரண்ட்ஷிப் பாடலை படமாக்கிய ராஜூ சுந்தரம்

விஜய் - பிரசாந்த் பங்குபெறும் பிரண்ட்ஷிப் பாடலை படமாக்கிய ராஜூ சுந்தரம்

விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது. இன்னொரு பக்கம் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தான் நடிக்கும் 68வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் விஜய். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் துவங்கிய இந்த படப்பிடிப்பில் விஜய் நடிக்கும் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகின்றது. படத்தில் விஜய்யின் அறிமுக பாடலான இந்த பாடல் பிரண்ட்ஷிப் சம்பந்தமான பாடலாக உருவாகிறது என சொல்லப்படுகிறது.

இந்த பாடலில் விஜய்யுடன் நடிகர் பிரசாந்த், பிரபுதேவா ஆகியோரும் சேர்ந்து நடனம் ஆடி உள்ளனர். இந்த பாடலுக்கு ராஜூ சுந்தரம் மாஸ்டர் நடனம் வடிவமைத்துள்ளார். விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் ஓப்பனிங் பாடலுக்கும் இவர் தான் நடனம் வடிவமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரண்ட்ஷிப் பாடல் ஒரு பிரண்ட்ஷிப் ஆந்தமாகவே உருவாக இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !