விஜய் 68வது படத்தில் இத்தனை சண்டை காட்சிகளா?
ADDED : 731 days ago
விஜய் நடித்துள்ள லியோ படம் அக்., 19ல் ரிலீஸாகிறது. அடுத்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் மைக் மோகன், ஜெயராம், சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர் .
இத்திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப திரைப்படமாக உருவாகி வருவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இந்த படத்தில் கிட்டத்தட்ட 6 சண்டை காட்சிகள் இடம் பெறுவதாக கூறப்படுகிறது. சில சண்டை காட்சிகள் தென் ஆப்ரிக்கா, பாங்காக், ஹாங்காங் போன்ற வெளிநாடுகளில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.