சுந்தர். சி, விஷால் படத்தின் புதிய அப்டேட்!
ADDED : 118 days ago
இயக்குனர் சுந்தர். சி தற்போது நயன்தாராவை வைத்து இயக்கியுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக உள்ளார்.
இதற்கிடையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர். சி ரஜினியின் 173வது படத்திலிருந்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து சுந்தர். சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியுள்ளது. ஏற்கனவே இதன் புரோமோ ஷூட் நிறைவு பெற்றுள்ளது. இந்த படத்தில் தமன்னா நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 5ம் தேதியன்று தொடங்குகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.