தனுஷ் 51வது படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் இதோ
ADDED : 902 days ago
நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனது 51வது படத்தில் நடிக்கவுள்ளார். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார். முக்கிய கதாபாத்திரத்தில் நாகார்ஜூனா நடிக்கின்றார். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
இத்திரைப்படம் அரசியல் கதை களத்தை மையப்படுத்தி உருவாகிறது. இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது. இப்போது இதற்கான ப்ரீ புரொடக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன.