உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : அம்மா இயக்கிய படங்களை தயாரித்த விஜய்

பிளாஷ்பேக் : அம்மா இயக்கிய படங்களை தயாரித்த விஜய்

தனக்கென்று தனி தயாரிப்பு நிறுவனம் வைத்துக் கொள்ளாதவர் விஜய். சொந்தமாக படங்கள் தயாரித்ததும் இல்லை. ஆனாலும் அவரது அம்மா ஷோபா சந்திரசேகர் இயக்கிய 'நண்பர்கள்' மற்றும் 'இன்னிசை மழை' ஆகிய படங்களை தயாரித்தவர் விஜய்.

ஷோபா சந்திரசேகர் சிறந்த கதாசிரியர். எஸ்.ஏ.சந்திரசேகரின் இரண்டாவது படம் 'சட்டம் ஒரு இருட்டறை'. விஜய் அறிமுகமான ‛நாளைய தீர்ப்பு' உள்பட கிட்டத்தட்ட 50 படங்களுக்கு அவர் கதை எழுதியுள்ளார்.

ஷோபா கதை எழுதி, இயக்கிய முதல் படம் 'நண்பர்கள்'. 1991ல் காதலர் தினத்தை முன்னிட்டு, பிப்ரவரி 14 அன்று வெளியானது. நீரஜ், மம்தா குல்கர்னி என்று தமிழர்களுக்கு பரிட்சயமில்லாத நடிகர்கள் பிரதான வேடங்களில் நடித்தனர். ந சங்கீத ராஜன் பின்னணி இசையமைக்க, பாபு போஸ் பாடல்களுக்கு இசையமைத்தார்.

இதனைத் தொடர்ந்து அடுத்த வருடமே 'இன்னிசை மழை' என்ற படத்தை ஷோபா எழுதி, இயக்கினார். இளையராஜா இசையில் பாடல் ஹிட்டாயின. ஆனால் இன்னிசை மழை வரவேற்பு பெறவில்லை. தான் இயக்கிய இரண்டு படங்களுமே தோல்வி அடைந்ததால் அதன் பிறகு படம் இயக்குவதை ஷோபா சந்திரசேகர் நிறுத்திக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !