பிளாஷ்பேக் : 'மெல்லிசை மன்னர்கள்' பட்டம் கொடுத்தது யார்?
ADDED : 1 hours ago
இசை அமைப்பாளர்கள் தங்கள் பெயருக்கு பின்னால் பட்டம் வைத்துக் கொள்வது வழக்கமான ஒன்று. இந்தப் பட்டங்கள் பல்கலைக்கழகங்களால் தரப்படுவது அல்ல, தனிமனிதர்கள் மற்றும் சில அமைப்புகள் அல்லது ரசிகர்கள் தரும் பட்டங்கள் ஆகும்.
திரை இசைத் திலகம் கே.வி மகாதேவன், இசைஞானி இளையராஜா, இசைபுயல் ஏஆர் ரகுமான், ராக்ஸ்டார் அனிருத் என பட்டங்கள் வருவது இப்படித்தான்.
காதலிக்க நேரமில்லை படத்தின் வெற்றி விழாவை திருவல்லிக்கேணி கலாச்சாரக் கழகம் நடத்தியது. இந்த விழாவில் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவருக்கும் 'மெல்லிசை மன்னர்கள்' என்ற பட்டத்தை நடிகர் சிவாஜி கணேசனால் முன்மொழியப்பட்டது. எம்.எஸ் விஸ்வநாதனிடமிருந்து ராமமூர்த்தி, பிரிந்த பிறகு 'மெல்லிசை மன்னர்' என்ற பட்டத்தை விஸ்வநாதன் பயன்படுத்தினார்.