உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛லியோ'வில் அரசியல் இல்லை ; கெட்டவார்த்தை நீக்கப்பட்டுவிட்டது : லோகேஷ் கனகராஜ்

‛லியோ'வில் அரசியல் இல்லை ; கெட்டவார்த்தை நீக்கப்பட்டுவிட்டது : லோகேஷ் கனகராஜ்

விஜய்யின் லியோ படம் நாளை(அக்., 19) வெளியாக உள்ள நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவர் கூறுகையில், ‛‛லியோ படம் வரவே மாஸ்டர் தான் காரணம். படத்தில் கெட்ட வார்த்தை பேசியது நடிகர் விஜய் அல்ல, அந்த கதாபாத்திரம். விஜய் பேசியதற்கு நானே பொறுப்பேற்கிறேன். படத்தில் அந்த வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. விஜய் படம் வெளியாகும்போது சிக்கல்கள் வருவது வழக்கம் தான். மாஸ்டர் படத்திற்கு கூட பிரச்னைகள் வந்தன.

ஸ்டார் நடிகர்களுடன் நான் சிக்கியதாக இல்லை. அதை எனக்கு கிடைத்த சுதந்திரமாக உணருகிறேன். லியோ எல்சியு-வா என்பது நாளை தெரிந்துவிடும். போதை பொருள் வேண்டாம் என்பதே எனது நோக்கம். அதனால் தான் படத்தில் அது தொடர்பான காட்சிகள் அதிகம் வருகின்றன. சில காட்சிகளை வன்முறை என்கிறார்கள். இதை நான் வன்முறை என்று சொல்ல மாட்டேன் ஆக் ஷன் என கூறுவேன். எனது படத்தில் பொதுவாகவே இரவு காட்சிகள் அதிகம் இருக்கும். எல்சியுவிற்கு நடிகர்களின் ஆதரவு தான் காரணம்

ரஜினி படம் எனது வழக்கமான கதையில் இருக்காது. வேறு ஒரு கதையில் இருக்கும். லியோவில் அரசியல் இல்லை. ஜெயிலர் வசூலை அது மிஞ்சுமா என தயாரிப்பாளர் தான் கவலைப்பட வேண்டும். நான் நல்ல படம் கொடுத்துள்ளேன். அனைத்து தியேட்டர் பிரச்னைகளும் இரவுக்குள் தீர்ந்து விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !