தெலுங்கில் தீபாவளியாக மாறிய கிடா
ADDED : 726 days ago
அறிமுக இயக்குனர் ரா..வெங்கட் இயக்கத்தில் காளி வெங்கட் மற்றும் மறைந்த நடிகர் பூ ராமு ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கிடா. கடந்த வருடம் நடைபெற்ற கோவா திரைப்பட விழா மற்றும் இந்த வருடம் மெல்போர்னில் நடைபெற்ற திரைப்பட விழா ஆகியவற்றில் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை இந்த படம் பெற்றது.
கிராமத்தில் உள்ள ஒரு தாத்தாவுக்கும் அவரது பேரனுக்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இது உருவாகியுள்ளது. கூடவே வீட்டில் வளர்க்கும் ஒரு கிடாய்க்கும் அந்த குடும்பத்துக்குமான பிணைப்பையும் இந்த படம் சொல்கிறது. இந்த நிலையில் இந்த படம் தற்போது தெலுங்கில் தீபாவளி என்கிற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு மொழிகளிலும் இந்த படம் வரும் நவம்பர் 11ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.