மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
679 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
679 days ago
தமிழ் சினிமாவில் காமெடியனாக பல படங்களில் நடித்தவர் சதீஷ். ஜெர்ரி என்ற படத்தில் அறிமுகமான இவர் அதையடுத்து தமிழ் படம், மதராசபட்டினம், தாண்டவம், எதிர்நீச்சல், மான் கராத்தே என பல படங்களில் காமெடியனாக நடித்திருக்கிறார். இந்த நிலையில் நாய் சேகர் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமான சதீஷ், தற்போது வித்தைக்காரன் என்ற படத்தில் மீண்டும் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இதையடுத்து தற்போது காஞ்ஜுரிங் கண்ணப்பன் என்ற ஒரு படத்தில் மூன்றாவது முறையாக அவர் ஹீரோவாக நடிக்கப் போகிறார். செல்வின் ராஜ் சேவியர் என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . இது குறித்த தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள சதீஷ், ஒவ்வொரு ஹீரோவிற்கும் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் நடிப்பது என்பது ஒரு கனவு தான். எனக்கும் அது ஒரு கனவாக இருந்த நிலையில், தற்போதைய இப்படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது. அவருக்கு எனது நன்றி என்றும் அந்த பதிவில் அவர் தெரிவித்திருக்கிறார். இந்த காஞ்ஜுரிங் கண்ணப்பன் படத்தையும் இதற்கு முன்பு சதீஷ் நடித்த நாய் சேகர் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது.
679 days ago
679 days ago