மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
679 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
679 days ago
2023ம் ஆண்டில் தமிழ் சினிமா வசூல் வரலாற்றில், ஒரு புதிய சாதனை படைக்கப்பட்டு, அது இரண்டு மாதத்திலேயே முறியடிக்கப்பட்ட நிகழ்வும் நடந்திருக்கிறது.
ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'ஜெயிலர்' படம் ஒரு வாரத்தில் 375 கோடியே 40 லட்ச ரூபாய் வசூலித்தது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த அறிவிப்பில், “தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு வார மொத்த வசூலில் அதிகம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் த ரெக்கார்ட் மேக்கர்” எனக் குறிப்பிட்டிருந்தார்கள்.
அந்த வசூல் சாதனையை 'லியோ' படம் முறியடித்துள்ளது. கடந்த வாரம் வெளிவந்த இப்படம் ஒரு வாரத்தில் 461 கோடிக்கும் கூடுதலாக வசூலித்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்தது. அந்த அறிவிப்பில், “தமிழ் சினிமா வரலாற்றில் 7 நாட்களில் அதிகமான மொத்த வசூலைப் பெற்ற படம், ‛‛பல ராஜாக்களை பாத்தாச்சு மா, நீ ஒரசாம ஓடிடு,'' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
ரஜினிகாந்த்தை 'ரெக்கார்ட் மேக்கர்' என 'ஜெயிலர்' தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டதை, 'லியோ' நிறுவனம் 'நீ ஒரசாம ஓடிடு' என பதிலடி கொடுத்துள்ளதாக ரசிகர்கள் நினைக்கிறார்கள்.
'ரெக்கார்ட் மேக்கர்'ஐ விட 'ரெக்கார்ட் பிரேக்கர்' தானே பெரியவர் ?.
679 days ago
679 days ago