கார் சேஸிங் படப்பிடிப்பிற்கு தயாராகும் விஜய் 68 படக்குழு
ADDED : 914 days ago
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, அஜ்மல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏற்கனவே இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்தது. இதையடுத்து இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பாங்காக் பகுதியில் தொடங்க உள்ளனர். இந்த படப்பிடிப்பில் ஒரு பிரம்மாண்டமான கார் சேஸிங் காட்சிகளை படமாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.